சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பபிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' கடந்த 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம் விருது தொகை, ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை உள்ளடங்கியதாக இந்த விருது வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விருது பெற தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள், அதன் மூலம் எட்டிய சாதனைகள் போன்ற தகுதிகளுடன் கூடிய விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க அடுத்த (அக்டோபர்) மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com