

மதுரை,
தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழக மக்கள் இதுவரை பார்க்காத அரசாங்கத்தை, பார்க்காத அரசு துறைகளையும், பார்க்காத முதல்-அமைச்சரையும் இனி பார்ப்பார்கள். எந்த முதல்-அமைச்சராவது தலைமைச் செயலகத்திற்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்களா? தலைமைச் செயலகத்திற்கு வந்துவிட்டு, சுமார் 1 மணி நேரம் இருந்துவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவார்கள். ஒரு வாரத்திற்கு இரண்டு முறைதான் தலைமைச் செயலகத்திற்கே வருவார்கள்.
ஆனால் நமது முதல்-அமைச்சர் விஜய் அவ்வாறு இல்லை. மக்கள் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும், அரசு இயந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும், சீரமைக்க வேண்டும் என்பதற்காக காலை முதல் மாலை வரை அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார். தமிழகத்திற்கு கண்டிப்பாக சிறப்பான மாற்றங்கள் வரும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.