ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பாலகம் அமைக்க மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 2023-2024-ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்கும் திட்டத்தின் கீழ், முன்வைப்பு தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிந்திடவும், எவரையும் சார்ந்து வாழாமல் சுய சார்பு எய்திடும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைத்திட வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com