ஒப்பாரி வைத்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து, ஒப்பாரி வைத்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பாரி வைத்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சங்கம் சார்பில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தையொட்டி, கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அதன்முன்பு அமர்ந்து மாற்றுத்திறனாளி பெண்கள், ஒப்பாரி வைத்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com