மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள குட்டம் கிராமத்தில் தமிழக அரசின் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார். சமூக நலத்திட்ட தாசில்தார் பத்மபிரியா, துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குட்டம் பஞ்சாயத்து தலைவர் சற்குணராஜ் வரவேற்றார். பொதுமக்களிடம் இருந்து 101 மனுக்கள் பெறப்பட்டது. சில மனுக்கள் மீது உடனடியாக தீர்வு பெறப்பட்டது. மற்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. முகாமில் வருவாய் ஆய்வாளர் துரைசாமி, குட்டம் கிராம நிர்வாக அலுவலர் சந்தனகுமார் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com