மக்கள் குறைதீர்க்கும் முகாம்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் சீனிவாசன் (கிழக்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். அதன்பின்னர் கோரிக்கை மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மொத்தம் 16 பேர் மனுக்கள் கொடுத்தனர்.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com