மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் சார்பாக கடையநல்லூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

கடையநல்லூர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் பிரேமலதா முன்னிலை வைத்தார். நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் மின் பொறியாளர் குருசாமி பேசும்போது, பொதுமக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவான தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com