மக்கள் குறைதீர்க்கும் முகாம்

வாணாதிராஜபுரம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வாணாதிராஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.முகாமுக்கு வாணாதிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அம்பிகாபதி, குடிமைப்பொருள் வழங்கல் பொது வினியோகத் திட்ட தனி தாசில்தார் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி பொதுமக்களிடம் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம், புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர். மேலும் உடனடியாக மனுக்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில் குடிமை பொருள் தனி வருவாய் அலுவலர் பரமானந்தம், வாணாதிராஜபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் ரம்யா, கிராம உதவியாளர் பூமிநாதன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com