போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
Published on

நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதில் 14 பேர் கலந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று அதன் விவரங்களை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என அவர் கூறினார். இதில் துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 18 பேர் கலந்து கொண்டு, போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com