சென்னையில் மக்கள் குறைதீர் முகாம்....618 புகார்களுக்கு தீர்வு

மற்ற புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மக்கள் குறைதீர் முகாம்....618 புகார்களுக்கு தீர்வு
Published on

சென்னையில் முதல்முறையாக பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பின் அடிப்படையில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி. கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையார், தி.நகர், புனித தோமையர் மலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

முகாமில் பெறப்பட்ட ஆயிரத்து 2 புகார்களில் 618 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும், மற்ற புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com