திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாகவும் உதவிகள் வேண்டியும் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 77 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 59 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 76 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி 54 மனுக்களும் இதர துறைகள் சார்பாக 93 மனுக்களும் என மொத்தம் 359 அணுக்கள் பெறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com