மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனுக்களை வழங்கினர்.

இதில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் திருப்தி அடையாத 19 மனுதாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் உத்தரவிட்டார். முகாமில் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com