மக்கள் குறை தீர்வு கூட்டம்

ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
மக்கள் குறை தீர்வு கூட்டம்
Published on

ஆரணி

ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, கணினியில் பட்டா திருத்தம் உள்பட 19 துறைகளை சார்ந்த 42 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உதவி கலெக்டர் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமாரவேலு மற்றும் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் தாலுகா உள்ளடங்கிய அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com