மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
Published on

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பட்டாமாறுதல், புதியகுடும்பஅட்டை, ஆக்கிரமிப்புஅகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 214 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யும் பணி நடைபெற்றுவருவதை பார்வையிட்டார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) லதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com