கடலோர பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கடலோர பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
கடலோர பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த 21 காவலர்கள் 3 பாய்மரப் படகுகள் மூலம் சென்னையில் இருந்து கடல் வழியே ராமேசுவரம் சென்று, மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இப்பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழ்நாடு காவல் துறையை மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. கடலோரப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் பணியில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com