மக்கள் நலப்பணியாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்
Published on

திருவாரூரில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன். இந்த ஆாப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் வசந்தன் முன்னிலை வகித்தார். சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பணி வரையறை, பணி பாதுகாப்பு, பணி நியமன ஆணை ஆகியவை வழங்க வேண்டும். பணியின் போது இறந்த, ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணியின்போது இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன், மாவட்டஇணை செயலாளர் அமர்நாத் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், மக்கள் நல பணியாளர் நல சங்கம் மாவட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com