பெரம்பலூர்: பள்ளி வகுப்பறையில் பையை வைத்துவிட்டு மாயமான மாணவிகள்

2 மாணவிகளும் பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து, திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.
2 school students disappear
Published on: 

பெரம்பலூர்,

9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெங்கலம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகள் ரசிகா (வயது 14) மற்றும் காளிமுத்து மகள் பிரியதர்சினி (வயது 14) இருவரும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் மாணவிகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். வகுப்பறையில் பையை வைத்து விட்டு மாணவிகள் அங்கிருந்து வெளியே சென்றனர். வகுப்பு தொடங்கியும் மாணவிகள் வராததால் தலைமை ஆசியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மாணவிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதில், 2 மாணவிகளும் பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து, திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாயமான 2 மாணவிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com