பெரியார் விவகாரம் - சீமானுக்கு சம்மன்

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் வடலூரில் பெரியார் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள நா.த.க. தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை போலீசார் சம்மனை வழங்கினர். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






