பெரியார் சாலை பெயர் மாற்ற விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் சாலை பெயர் மாற்ற விவகாரம் - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது முகநூல் பதிவில், 1979ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இந்த சாலைக்கு சூட்டப்பட்ட பெயர், தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை கண்டிப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துவதாகவும், தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com