அரியலூர் அருகே பெரியார் சிலை அவமதிப்பு - தி.க., தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு

அரியலூர் அருகே பெரியார் சிலையை அவமதித்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.க., தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் அருகே பெரியார் சிலை அவமதிப்பு - தி.க., தி.மு.க.வினர் குவிந்ததால் பரபரப்பு
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் மார்பளவு பெரியார் சிலை உள்ளது. நேற்று மதியம் அந்த சிலையின் கண்கள் மீது தார் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார், அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பெரியார் சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com