

மதுரை,
தஞ்சை கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்ற ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை பகுதியை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் 'தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் அருகே பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கோவில் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டு அறநிலையத்துறை அனுமதியின்றி இந்த சிலை நிறுவப்பட்டது. இதனால் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (30.10.2026) உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, தந்தை பெரியார் சிலையை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவில், கோவில் நிலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை 4 வாரத்தில் அகற்றி வேறு இடத்தில் அமைக்க தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.