தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Sept 2025 7:23 AM IST (Updated: 17 Sept 2025 8:32 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியார் குறித்த ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் குறித்த ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!

தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story