குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி


குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
x

பலத்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செங்கோட்டையில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை இடி- மின்னலுடன்பலத்த மழை பெய்தது.

இந்த சூழலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் அருவியில் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story