கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
Published on

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து, இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com