

சென்னை
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.
இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் வைகுந்தத்திற்கு சாலை அமைக்க கிருஷ்ண பகவானிடம் அனுமதி பெற வேண்டும். அமைச்சர் அனுமதி பெற்றாரா என தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சேகர்பாபு அதிகாலையிலேயே வைகுந்தம் செல்லும் வழியை காட்டிக் கொண்டிருக்கிறார்; வைகுந்தமோ, சிவலோகமோ சேகர்பாபு வழிகாட்டுவார். சேகர் பாபு அறநிலைய துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை தீட்டி வருகிறார் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.