நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை இனி ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற அனுமதி - அரசாணை வெளியீடு


நுங்கம்பாக்கம் கல்லூரி பாதை இனி ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்ற அனுமதி - அரசாணை வெளியீடு
x

1964 - 2000 வரை கல்லூரிப் பாதையில் நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை 'ஜெய்சங்கர் சாலை' என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிப் பாதையில் நடிகர் ஜெய்சங்கர் 1964 - 2000 வரை வசித்து வந்தார். இந்த நிலையில், நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் இது குறித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சாலைக்கு பெயர் மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story