கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்கும் மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு

கூடங்குளத்திலேயே அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி 2023-24-ஆம் அண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com