சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி

பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி
Published on: 

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்துவந்த மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நவம்பர் 6-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

X