குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழ சீசன் தொடக்கம்..!

ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட பெர்சிமன் பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் கருதப்படுகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழ சீசன் தொடக்கியது.
பெர்சிமன் பழம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கியுள்ளது.

பெர்சிமன் பழ சீசன்

நீலகிரி மாவட்டத்தில், பேரிக்காய், ஆரஞ்சு, லிச்சி, பிளம்ஸ், பீச், லில்லி உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழப்பண்ணையில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

இது ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இந்த பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் கருதப்படுகிறது.

விற்பனை

சீசன் தொடங்கிய நிலையில், குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன. குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழம் கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழம் மருத்துவ குணம் வாய்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் இந்த அரிய வகை பழங்களை மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com