பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்: முதல் - அமைச்சர் விஜய் புகழ் வணக்கம்

கர்மவீரரின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றி அவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து பயணிப்போம்.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்: முதல் - அமைச்சர் விஜய் புகழ் வணக்கம்
Published on: 

சென்னை

பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

காமராஜர் நினைவு நாள்

எளிமையான வாழ்க்கையாலும், நேர்மையான நிர்வாகத்தாலும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!

கிராமந்தோறும் பள்ளிகளைத் திறந்து, மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்விப் புரட்சிக்கு வித்திட்டதோடு, எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி, தொழில் முன்னேற்றத்திற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர்.

தன்னலமற்ற பொதுச்சேவைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த கர்மவீரரின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றி அவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து பயணிப்போம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com