செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் பிராணிகள் நல வாரியத்திடம் பதிவு செய்ய அறிவுறுத்தல்

இதுவரை பதிவு செய்யாமல் நிறுவனங்களை நடத்துபவர்கள் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.
செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் பிராணிகள் நல வாரியத்திடம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
Published on

சென்னை,

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்துச் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவிக்கை GSR 844 (E) நாள்: 06.09.2018, பிராணிகள் வதை தடுப்பு (செல்லப்பிராணிகள் விற்பனை நிலையம்) விதிகள் 2018-ன் படியும், தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்களும் மத்திய சுற்றுசூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அறிவிக்கை GSR 496 (E) நாள்: 23.05.2017, பிராணிகள் வதை தடுப்பு சட்டப்படி (நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை விதிகள்) 2017-ன் படியும் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் பதிவுசெய்து கொள்ளப்பட வேண்டும் என 12.09.2020 அன்று தினசரி நாளிதழில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் அவ்வரிவிற்பனையை ஏற்று ஒரு சில செல்லப்பிராணிகள் விற்பனை நிலையம் (pet shop) மற்றும் நாயின இனப்பெருக்கம் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியத்தில் பதிவு மேற்கொண்டுள்ளனர். எனவே இதுவரை பதிவு செய்யாமல் நிறுவனங்களை நடத்துபவர்கள் உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.09.2025-க்குள் மேலே குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு கிடைக்கப்படும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 01.10.2025-க்குப்பின் பதிவு செய்யாமல் நடத்தப்படும் நிறுவனங்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களை https://tnawb.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com