தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அதிரடி உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அதிரடி உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

சென்னை ஐகேர்ட்டில், வெங்கட சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த பெதுநல மனுவில், 2024-ம் ஆண்டு நடந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் சேர்த்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட வேண்டும். அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த பொது நல வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியேர் விசாரணை நடத்தியநிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பாக சுப்ரீம் கேர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்கிறேம் என்று உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com