

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக தற்காலிகமாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் கொத்தமங்கலம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.