பஸ் வசதி இல்லாத கிராமத்துக்கு பணிமாறுதல்: சமையலராக பணிபுரியும் மனைவியை சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்யவேண்டும் கலெக்டரிடம், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மனு

பஸ் வசதி இல்லாத கிராமத்துக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு சமையலராக பணிபுரியும் தனது மனைவியை சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என கலெக்டரிடம், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மனு கொடுத்துள்ளார்.
பஸ் வசதி இல்லாத கிராமத்துக்கு பணிமாறுதல்: சமையலராக பணிபுரியும் மனைவியை சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்யவேண்டும் கலெக்டரிடம், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மனு
Published on

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் பாவந்தூர் கிராமத்தில் வசிக்கும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ராஜமாணிக்கம் (வயது 63) நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான எனக்கு லட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். ஒரு மகள் திருப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். மனைவி லட்சுமி பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்ததோடு, கண்பார்வையற்ற என்னையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் எனது மனைவி லட்சுமியை அதிகாரிகள் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஸ் வசதி இல்லாத சேரந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து விட்டனர். எனவே என் மனைவியால் சேரந்தாங்கல் கிராமத்திற்கு தினமும் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே சொந்த ஊரான பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மீண்டும் இடமாற்றம் செய்யவேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com