அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு

அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் நரிக்குறவர்கள் மனு
Published on

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கூட்டத்தில், அரியலூர் வாலாஜாநகரம் குருவிக்காரன் குட்டையில் குடியிருக்கும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வந்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில், எங்கள் பகுதியில் 34 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை உட்பிரிவு செய்து பட்டா நகல் வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் சாலை, குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் வாய்க்கால் வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும். வீடு கட்ட அரசு நிதி உதவி வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

268 மனுக்கள்

மேலும், கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 268 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (நிலம்) பிரபாகரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com