அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய மனு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், "அதிமுக பொதுச்செயலாளர் என தன்னை ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com