மாற்றுத்திறன் தலையாரிகளுக்கு ஊர்திப்படி வழங்க வேண்டும்

மாற்றுத்திறன் தலையாரிகளுக்கு ஊர்திப்படி வழங்க வேண்டும் என கலெக்டரிடம், கிராம உதவியாளர் சங்கம் மனு கொடுத்தனர்.
மாற்றுத்திறன் தலையாரிகளுக்கு ஊர்திப்படி வழங்க வேண்டும்
Published on

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் முத்தையா தலைமையில் மாநில துணைச் செயலாளர்கள் இசக்கிமுத்து, பிச்சுகுட்டி, நெல்லை மாவட்ட தலைவர் நாராயணன், செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட புதிய கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கலேக்டரிடம் கொடுத்த மனுவில், "நெல்லை மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கத்துக்கு முன்னீர்பள்ளம் கிராமத்தில் 5 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி தலையாரிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் ஊர்திப்படி நிறுத்தப்பட்டுள்ளது, அதனை மீண்டும் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com