பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
Published on

சென்னை,

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. 21வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உயர்ந்து இருக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரேல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மக்களின் பாதிப்பை உணர்த்தும் வகையில் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com