சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
Published on

சென்னை,

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று இவற்றின் விலை உயர்ந்து விற்பனையானது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.27க்கும், டீசல் விலை ரூ.96.93க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ101.53க்கும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து ரூ.97.26க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com