

சென்னை,
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த சுழலில் கடந்த 14 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் 15வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.82.58-க்கும், டீசல் 51 காசுகள் உயர்ந்து ரூ.75.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த விலை உயர்வால் வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.