5 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

ஒரே கிராமத்தில் 5 வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் ஒடப்பட்டி கிராமத்தில், 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழில் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஒடப்பட்டி கிராமத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் அங்குள்ள பாண்டி, பிச்சப்பன், செல்வம், முருகானந்தன், கலைச்செல்வி ஆகிய 5 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். அவை பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறின. அதில் 2 வீடுகளில் லேசாக தீப்பற்றியது. உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

போலீஸ் குவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பலை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பதற்றம் நிலவுவதால் அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com