ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - கைதான ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைப்பு

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - கைதான ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைப்பு
Published on

சென்னை, 

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.

அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது.  உடனடியாக நள்ளிரவு 1.30க்கு வினோத்தை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் காலையில் வருமாறு சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்புடன் சிறை வாசலில் அதிகாரிகள் காத்திருந்தனர். விடிய விடிய சிறைக்கு வெளியே காத்திருந்த அதிகாரிகள், அதிகாலை 6.15 மணிக்கு ரவுடி கருக்கா வினோத்தை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com