20 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்

அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 20 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
20 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
Published on

தொண்டி

திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள புலியூர் கிராமத்தில் ஒரு கடையில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி சோதனையிட்டுள்ளார். அப்போது அங்கு அரசு அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக பெட்ரோல் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஒரு கேனில் இருந்த 20 லிட்டர் பெட்ரோலை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி(வயது 47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com