பெட்ரோல் விலை 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைந்தது

பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.73.11 ஆக இன்று சென்னையில் விற்பனையாகிறது.
பெட்ரோல் விலை 18 காசுகள் குறைப்பு, டீசல் விலையும் குறைந்தது
Published on

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை ஏறுமுகத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ரூ.73.11 காசுகளாகவும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து 67.98 ஆகவும் விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com