சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்வு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. அதன்பின் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் உயர்ந்து ரூ.75.56க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com