

சென்னை,
பெட்ரோல் நிரப்ப வந்த இளைஞருக்கும் பெட்ரோல் பங்க் ஊழியருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.
சென்னை போரூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் ஒருவர் வந்துள்ளார். ரூ.300 க்கு பெட்ரோல் போட்டு விட்டு ஜிபே மூலம் பணத்தை சிறுகச் சிறுக அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் பணம் செலுத்தி விட்டு சென்ற இளைஞரை துரத்திப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில், பெட்ரோல் பங்க் ஊழியர் கையில் கிடைத்த தலைக்கவசத்தை கொண்டு இளைஞரை தாக்கினார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.