புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர் பவனி

புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர் பவனி
Published on

ஆலங்குடி அருகே தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 26-ந் தேதி ஆலய பங்குத்தந்தை அமுல் வில்லியம் கூட்டுப்பாடல் திருப்பலி பூஜையுடன் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் கிராம பொதுமக்களால் காலை முதல் மாலை வரை தேர்பவனி மற்றும் நவநாள் திருப்பலி மன்றாட்டு பாடல் பாடி கலை நிகழ்ச்சி நடந்தது. அரசடிபட்டி பங்குத்தந்தை அமுல் வில்லியம் மற்றும் கிராம பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் விழா கூட்டுப்பாடல் திருப்பலியுடன் மேள தாளம், வாணவேடிக்கைகள் முழங்க தேர் பவனி நடந்தது. இதனை தொடர்ந்து சிறுமிகளுக்கு முதல் திருவிருந்து நடைபெற்றது. தொடர்ந்து நடந்த தேர்பவனி நான்கு வீதிகள் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள், பங்குத்தந்தையர்கள், அருட் சகோதரிகள், அப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com