

சென்னை,
பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் உடற்கல்வி வகுப்பு என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிகளுக்கு திருத்திய கால அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :-
இன்றைய தினம் பள்ளிக்கல்வி துறை சார்பில் திருத்திய பள்ளி கால அட்டவணை வெளியிடப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மாணவர்கள் தினந்தோறும் உடற்கல்வி வகுப்புகள் கேட்டு கொண்டனர். தமிழக முதல் - அமைச்சர் ஜோசப் விஜய் ஆணையின் மூலமாக பள்ளியில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் திருத்திய கால அட்டவணையை நாங்கள் இன்று வெளியிட்டுள்ளோம்.
வாரத்தில் 5 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கேட்ட மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கொடுத்துள்ளோம். இதற்கு ஆணை வழங்கிய தமிழக முதல் - அமைச்சருக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உடற்கல்வி வகுப்புகளை எந்த காரணத்தை பயன்படுத்தியும் தடை செய்யக்கூடாது. அதற்கு மாறாக குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.