மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
Published on

சென்னை,

தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துவைக்க வேண்டுமென ஏற்கெனவே அறுவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. நாளை வாக்களிக்க வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வெப்ப அலை காரணமாக அசெளகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com