தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனார் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

'தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனார் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Published on

சென்னை,

'தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் 'தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனார் அவர்களது 118-ஆவது பிறந்தநாள் இன்று!

உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர்!

பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி.என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com